ROAD ஒன்றில் வாகனங்கள் அறக்க... பறக்க சென்றுக் கொண்டிருக்கின்றன. TRAFFIC SIGNAL போடப்படுகிறது. அனைவரும் நிற்கின்றனர். ஒரு பெண் குழந்தை நாயுடன் வந்து நிற்கிறது. வாகனங்கள் வேகமாக செல்கிறது. அதில் ஒரு காரில் இருந்து சிறு குழந்தை ஒன்று COCA COLA CAN ஒன்றை தூக்கிப் போடுகிறது. அந்த BOTTLE கீழே விழுவதை, சிக்னலில் இருக்கும் குழந்தை பார்க்கிறது. ஒரு கார் வேகமாக வர, அதன் சக்கரத்தில் கேன் மிதிப்பட போக.. கேன் கண் விழித்து பதறுகிறது. குழந்தை அதைக்கவனித்து பதறி கண்ணை மூடிக்கொள்கிறது.
கண் திறந்து பார்க்க.. அந்த CAN வேறு இடத்தில் கிடக்கிறது. இன்னொரு லாரி அங்கு CROSS ஆக, காற்றின் வேகம் அந்த CAN'ஐ உருட்டி விடுகிறது. CAN வேறொரு இடத்தில் போய் விழ.. இன்னொரு லாரியின் சக்கரம் மிதிக்கப்போக.. நாய் குலைக்க.. குழந்தை பதற.. CAN வந்த வேகத்தில் தரையில் பட்டு எகிறி இன்னொரு இடத்தில் விழுகிறது. இப்படியாக CAN அங்குமிங்கும் தள்ளாடி, தள்ளாடி தப்பிக்கிறது. இப்படியாக CAN அங்குமிங்கும் தள்ளாடி ரோட்டின் அந்த பக்கம் போய் விழுகிறது. ஒரு ROAD ROLLER CROSS ஆக.. CAN உருண்டோடிக் கொண்டிருக்கிறது. குழந்தை பதற.. நாய் குலைக்கிறது. ROAD ROLLER குழந்தை, நாய் இருவரின் கண் முன்னே செல்கிறது. SIGNAL சிகப்பு விளக்கு எரிய, குழந்தையும், நாயும், ஓடிப்போய் பார்க்க.. குழந்தை கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. நாய் ஓரிடத்தைப் பார்த்து குலைக்க.. அங்கு CAN ஒரு வேலியில் சிக்கி இருக்கிறது.
குழந்தை அந்த CAN'ஐ பத்திரமாக எடுத்து ஓரிடத்தில் வைக்கிறது. CAN'க்கு எதிரே, குழந்தையும் நாயும் நிற்க.. குழந்தையின் முகம் புன்சிரிப்பில் இருந்து கோபமான, உக்கிரமான முகத்துடன் மாறுகிறது. குழந்தை எகிறி குதித்து அந்த பாட்டிலை காலால் CRUSH செய்கிறது. CAN நசுங்கி கிடக்க.. குழந்தையும், நாயும் நடந்து போவது தெரிகிறது.